சனி, 13 நவம்பர், 2010

நபிகளார் சமூதாயத்திற்கு பின்பற்ற விட்டுச் சென்றவை

قال رسول الله صلي الله عليه واله وسلم
إني تارك فيكم الثقلين : كتاب الله ، وعترتي أهل بيتي ، ما إن تمسكتم بهما لن تضلوا بعدي أبدا


ஏய் மனிதர்களே! நான் இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றேன் நீங்கள் அவ்விரண்டையும் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவர மாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும் எனது அஹ்லுல்பைத்துமாகும் எனக்கூற நான் செவியுற்றேன் என அறிவிக்கின்றார்கள். (ஆதாரம். திர்மிதி 2-308 ஹதீஸ் 3788)

காரூன்,ஹாமானின் நண்பர்கள்

ـ قال رَسُولُ اللّهِ (صَلَّى اللّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ سَلَّم
لا تُضَيِّعُوا صَلاتَكُمْ، فَإنَّ مَنْ ضَيَّعَ صَلاتَهُ، حُشِرَ مَعَ قارُونَ وَ هامانَ، وَ كانَ حَقّاً عَلىِ اللّهِ أنْ يُدْخِلَهُ النّارَ مَعَ الْمُنافِقينَ
.(وسائل الشّيعة: ج 4، ص 30، ح 4431
நாயகம் ஸல்லல்லாஹ{அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: உங்களது தொழுகைகளை (இலேசாக நினைத்து) வீனாக்கி விடாதீர்கள். எவன் தன் தொழுகைளை வீனாக்குகிறானோ அவன் காரூன் ஹாமான் ஆகியோருடன் எழுப்பப்படுவான் இன்னும் அவனை நரகில் நுளைய வைப்பது அல்லாஹ்வின் கடமையாகும். (வஸாயிலுஸ் ஷீஆ பாகம் 4 பக்கம் 30, ஹதீது இல: 4431)

மூன்று பாவங்களுக்கறிய தண்டனை

9ـ قالَ (صلى الله عليه وآله): ثَلاثَةٌ مِنَ الذُّنُوبِ تُعَجَّلُ عُقُوبَتُها وَ لا تُؤَخَّرُ إلى الاخِرَةِ: عُقُوقُ الْوالِدَيْنِ، وَ الْبَغْيُ عَلَى النّاسِ، وَ كُفْرُ الاْحْسانِ.( أمالى طوسى: ج 1، ص 13، بحارالأنوار: ج 70، ص 373، ح 7.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: மூன்று பாவங்களுக்கறிய தண்டனை உடனடியாக வழங்கப்படும் அதை மறுமை வரை பிற்படுத்தப் பட மாட்டாது. அவை: 1.பெற்றோரைத் துண்புறுத்தல் 2. மக்களுக்கு தீங்கு இழைத்தல் 3. மற்றவர்கள் செய்த நற்செயல்களுக்கு நன்றி மறத்தல் ஆகும். ( ஆமாலி ஷெய்க் தூஸி பாக 1 பக் 13, பிஹாருல் அன்வார் பாக 70 பக் 373 ஹதீது இல 7)

புதன், 10 நவம்பர், 2010

உலகில் விலை போகும் மனிதன்

قالَ(صلى الله عليه وآله
شَرُّالنّاسِ مَنْ باعَ آخِرَتَهُ بِدُنْياهُ، وَ شَرٌّ مِنْ ذلِكَ مَنْ باعَ آخِرَتَهُ بِدُنْيا غَيْرِهِ.( من لا يحضره الفقيه: ج 4، ص 353، ح 5762

நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: தன் மறுமையை தன் உலகிற்கு விற்பவனே மிகவும் மோசமான மனிதன். இன்னும் தன் மறுமையை வேறொரு உலகத்திற்கு விற்பன் அவனை விடவும் மோசமானவன். (மன்லா யஹ்ழுருஹ{ல் பகீஹ் பாக 4 பக் 353 ஹதீது இல 5762)